KFC நிறுவன உணவு விஷமானதால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8.3 மில்லியன் நட்ட ஈடு.
உலகளாவிய ரீதியில் உணவு வகைளை விற்பனை செய்துவரும் KFC நிறுவனத்தின் உணவு விஷமானதால் 6 மாதங்களாக கோமா நிலையில் இருந்த அவுஸ்திரேலிய சிறுமி யொருவருக்கு அந்த நிறுவனம் 8.3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை நட்ட ஈடாக வழங்கும்படி KFC நிறுவனத்துக்கு நியூ சவுத் வேல்சின் உயர்நீதிமன்ற நீதிபதி, உத்தரவிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு சிட்னியில், மோனிகா சமான் எனும் சிறுமி உட்பட அவரின் குடும்பத்தினர் KFC சிக்கன் உணவை உட்கொண்ட நிலையில் சிலர் சுகயீனமுற்றனர். எனினும் குறிப்பட்ட சிறுமி மாத்திரம் சுகமடையாமல் 6 மாதங்களாக கோமா நிலையில் இருந்த பின்னர், தற்போது பேச முடியாத நிலையில் சக்கர நாட்காலிலேயே உள்ளார். இதற்கு நட்டஈடாக நியூ சவுத் வேல்சின் உயர்நீதிமன்ற நீதிபதி, அவுஸ்திரேலிய டொலர் 8.3 மில்லியனை நட்டஈடாக வழங்கும்படி KFC நிறுவனத்துக்குப் பணித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு தமக்கு வியப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள KFC தரப்பு, இது தொடர்பாக தாம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment