தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற வெள்ளவத்தையை சேர்ந்த பெண் கைது
வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணெருவர் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு தங்க பிஸ்கடடுக்களை கடத்த முற்பட்ட வேளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை நேற்றிரிவு கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்திய போது, அவரின் பயணப் பொதியிலிருந்து பணம் மற்றும் சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் மற்றும் பணம் என்பன அரசுடமையாக்கப்பபட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவு தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment