பாணின் விலை அறுபது ரூபாவாக அதிகரிக்குமாம்?
கோதுமை மாவின் விலை உயர்வினை தொடர்ந்து பாண் மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களில் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் அனைத் திலங்கை உற்பத்தி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சம்மேளனத்தின் நிறைவேற்று குழு நாளை இரவு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சில காரணங்களினால் இன்று மாலை கூடவிருந்த நிறைவேற்றுகுழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக சம்மேளனத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளை கூடவுள்ள நிறைவேற்றுகுழு கூட்டத்தில் பாணின் விலையை மூன்று ரூபா தொடக்கம் 5 ரூபாவரையில் உயர்த்த எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இறுதியாக பாணின் விலை அதிகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment