Monday, April 30, 2012

எல்லாம் முழுமையானவை என்று கூறக்கூடிய ஊடகம் நாட்டில் இல்லை. - மேர்வின் சில்வா

நான் ஊடகங்கள் மீது அதிக அன்பு கொண்டவன். இலங்கையில் ஊடகங்களில் பணியாற்றுவோர் ஆசியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே முன்னுதாரணமானவர்கள். எந்த விடயத்தை பற்றியும் எழுத அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது.ஆயினும் எல்லாம் முழுமையானவை என்று கூறக்கூடிய ஊடகம் எமது நாட்டில் இல்லை என்று மக்கள் தொடர்பு மக்கள் அலுவல்;கள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

அரச சேவையை கிராமத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஜனசெதம ஜனஹவுல' என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட நடமாடும் மக்கள் சேவையில் கலந்து கொண்டு, நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு நிவ்ஸ்ட்டட் மகளிர் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற. நடமாடும் மக்கள் சேவையில் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்தப்;பட்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

என்னைப்பற்றி பிழையான தகவல்களை சில தேசிய ஊடகங்கள் வெளியிடுகின்றன. சில ஊடகவியலாளர்கள் எனக்கெதிராக பொய் செய்திகளை வெளியிடுகினறனர். எனக்கெதிராக ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக யாராவது நிரூபித்தால் தேர்தலில் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ள நான் எனது மக்களிடம் தெரிவித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவேன்.

இந்நிகழிவில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்னவும் இங்கு உரையாற்றினார்.

செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com