நாட்டுடன் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் ஐமசுமு மேதின ஊர்வலம்.
தாயகத்திற்கு எதிரான சவால்களை வெற்றிகொண்டு, தாயகத்தை காக்கும் மக்கள் அணியினை பலப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ள, பாட்டாளி மக்கள் தயாராகியுள்ளனர்.
கடந்த வருடத்தை போன்று, இவ்வருடமும் இலங்கை, சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே, இம்முறையும் மே தின நிகழ்வுகள், இடம்பெறவுள்ளன. கடந்த வருடம் மே மாதத்தின்போது, தருஸ்மன் அறிக்கையின் மூலம் தாயகத்தின் மீது அழுத்தங்களை மேற்கொள்ள, சர்வதேச சூழ்ச்சிதாரிகள் முயற்சி மேற்கொண்ட வேளை, லட்சக்கணக்கான பாட்டாளி மக்கள் கொழும்பில் அணிதிரண்டு, நாட்டை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தனது மே தினத்தை , நாட்டுடன் ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில், கொழும்பில் நடாத்தவுள்ளது. அரசாங்கத்தையும், நாட்டையும் சீர்குலைப்பதற்கு, தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிக்காரர்களின் மத்தியில், நாட்டை முன்னிலைப்படுத்தி, அனைத்து பாட்டாளி மக்களும், இம்முறை மே தினத்தில் ஒன்றிணைவார்கள் என்பதில், எவ்வித ஐயமும் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பில், லட்சக்கணக்கான மக்கள் மே முதலாம் திகதி, கொழும்பில் அணிதிரளவுள்ளனர்.
நாட்டின் சுபீட்சத்திற்காக, எதிர்காலத்திற்காகவும், வியர்வை மற்றும் இரத்தம் சிந்தி உழைக்கும் பாட்டாளி மக்கள், அந்த சுபீட்சமிகு எதிர்காலத்தை அழித்தொழிப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்கப்போவதில்லையென்பதை, பறைசாற்றுவதே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நடாத்தும் மே தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
0 comments :
Post a Comment