இலங்கை திரும்பும் தமிழர்கள் மீது எவ்வித அழுத்தங்களும் இல்லை. பிரித்தானியா
இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர், அரசியல் தஞ்சம் கோரி, பிரிட்டன், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் நிலைகொண்டுள்ளதாகவும் இவர்கள் நாடு திரும்பும்போது இவர்களுக்கு எதிராக எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சும், பொதுநலவாய அமைப்பு அலுவலகமும் வெளியிட்டுள்ள 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், தெரிவித்துள்ளது.
இலங்கையில் தமக்கு எதிராக அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து, இவர்கள் குறித்த நாடுகளில் தங்கியிருப்பதற்கு, முயன்று வருகின்றனர். ஆனால், அவ்வாறு தாயகம் திரும்புவோருக்கு எதிராக, எவ்வித அழுத்தங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment