கொலம்பியாவின் நெவாடோ த ருயிஸ் எரிமலை வெடிக்கும் அபாயம்.
கொலம்பியாவின் நெவாடோ த ருயிஸ் எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தலைநகரான பொகோட்டாவிலிருந்து 145 மைல் தொலைவிலேயே இந்த எரிமலை உள்ளது. 17 ஆயிரத்து 457 அடி உயரமான நெவாடோ த ருயிஸ் எரிமலை எதிர்வரும் சில தினங்களில் இயங்க தொடங்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு இவ் எரிமலை சீற்றம் காரணமாக 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்புது குறிப்பிடத்தக்கது. திடீர் அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக நிவாரண குழுக்களும் பாதுகாப்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கொலம்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment