நைஜிரியாவில் இடம்பெற்ற 2 கார் குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி
நைஜிரியாவில் இடம்பெற்ற 2 கார் குண்டு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய நைஜிரியாவின் கதுனா நகரில் சன ஜனமாட்டம் மிக்க வீதியொன்றில் இந்த குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. கத்தோலிக்க தேவாலயமொன்றை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாஸ்கு உற்சவத்தில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் இதில் காயமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை. நைஜிரியாவில் செயற்படும் பொக்கோ ஹராம் இஸ்லாமி தீவிரவதாக அமைப்பு இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நைஜிரியா பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment