கொழும்பிலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர் - சுகாதார அமைச்சு
டெங்கு நோய் காரணமாக இவ்வருடம் 38 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இதே வேளை இக்காலப்பகுதியில் 9317 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியிருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சு இவ்வருட ஜனவரி மாதத்தின் பின்னர் டெங்கு நோய்க்குள்ளாகியிருப்பவரின் எண்ணிக்கை வீழ்ச்சி யடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி மாதம் 3 ஆயிரத்து 892 பேரும், பெப்ரவரி மாதம் 3 ஆயிரத்து 4 பேரும், மார்ச் மாதத்தில் 2 ஆயிரத்து 421 பேரும் நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளதுடன், 51 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே நோய்த்தக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு நோயினால் அதிகளவு உயிரிழந்துள்ளனர் எனவும், கொழும்பில் 14பேரும், கம்பஹா மாவட்டத்தில் 6 பேரும் கண்டியில் 4 பேரும் புத்தளத்தில் மூவரும் காலி, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் முறையே தலா இருவர் வீதமும் கல்முனை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் ஒருவர் என்ற ரீதியிலும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment