இலங்கையின் யோசனைக்கு, பிராந்திய நாடுகள் இணக்கம்.
2015 ஆம் ஆண்டளவில் தெற்காசிய பிராந்தியத்திலிருந்து ரே-பீஸ் எனப்படும் விசர்நாய்க்கடி நோயை ஒழிப்பதற்கான இலங்கையின் யோசனைக்கு, பிராந்திய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன
2015 ஆம் ஆண்டளவில் தெற்காசியாவில் ரேபீஸ் நோயை இல்லாதொழிக்கும் நோக்கில்,மாலைதீவில் இடம்பெற்ற தெற்காசிய வலய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில், பங்குபற்றிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, யோசனையென்றை முன்வைத்தார்
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைக்கு, அனைத்து நாடுகளும், அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன். இலங்கை சுகாதாரத்துறையில் அடைந்துள்ள வளர்ச்சியை கருத்திற்கொண்டு, 2014 ஆம் ஆண்டு தெற்காசிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டை, இலங்கையில் நடாத்துவதற்கும், இம் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment