புகையிரதமூடாக, மன்னார் செல்வதற்கான வாய்ப்பு வெகுவிரைவில் - புகையிரத திணைக்களம்.
மன்னார் தீவகத்தின் அழகினை கண்டுகளிக்க, வெகுவிரைவில் புகையிர தமூடாக, மன்னார் செல்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்து ள்ளது. மதவாச்சியிலிருந்து தலை மன்னார் வரையான புகையிரத வீதியை, பயங்கரவாதிகள் முற்றுமுழுதாக சேதமாக்கியதையடுத்து அப்பிரதேசத்திற்கான புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் மன்னார் உட்பட மடு தேவஸ்தானத்திற்கு வழிபாடுகளுக்கு செல்லும் மக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இதனையடுத்து 106 கிலோ மீட்டர் நீளமான இந்த புகையிரத வீதியை புனரமைப்பதற்கான வேலைத் திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு 266 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதற்கான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறுமெனவும் முதல் கட்டமாக மதவாச்சி, புகையிரத நிலையத்திலிருந்து மடு பிரதேசம் வரையான வீதி புனரமைக்கப்படவுள்ளதுடன், இரண்டாம் கட்டமாக மடு பிரதேசத்திலிருந்து தலைமன்னார் வரையான புகையிரத வீதி, புனரமைக்கப்படவுள்ளதாகவும், புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment