துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் மூன்று நபர்கள் நீர்கொழும்பில் கைது
துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் திஸாஹேவத்த - கமேகடே வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கட்டான, சீனக்குடா மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரிவால்வர்கள், 12 ரவைகள். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று, ஒரு இலட்சத்து 4950 ரூபா பணம், இரு ஜோடி வாகன இலக்க தகடுகள், மற்றும் உடைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment