அவுஸ்திரேலியாவுக்கருகில் 6.5 ரிக்டர அளவில் நில நடுக்கம் பதிவு - அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.
அவுஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்ததுள்ளது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பாரிய அதிர்வு உணரப்பட்டதாகவும் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தள்ளதாகவும் நில நடுக்கம் காரணமாக கடலில் வழக்கத்துக்கு மாறாக உயரமான அலைகள் எழும்பிய தாகவும் அவுஸ்திரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படாது என பசிபிக் சுனாமி மையம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment