பலலட்சம் பெறுமதியான எரிபொருளை மோசடி செய்த யாழ்.கூட்டுறவு சங்க முகாமையாளர் கைது.
யாழ்.வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர் ஒருவர் டிசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் ஒயில் ஆகிய எரிபொருட்களை மோசடியான முறையில் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் யாழ்.விசேட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வேலணை பலநோக்கு கூட்டுறவச்சங்க முகாமையாளர் 623,411 பெறுமதியான எரிபொருட்களை மேசடி செய்ததாக யாழ்.விசேட குற்றத் தடுப்பு பொலிஸாரினால், இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, விசாணையை மேற்கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் இவரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment