நகைப்புக்குரிய அரசியல் கட்சியாக ஜே.வி.பி திகழ்கின்றது - பிரதி சபாநாயகர்.
பல பிரிவுகளாக பிளவுபட்டு பல்வேறு பெயர்களுடன் நகைப்புக்குரிய அரசியல் கட்சியாக ஜே.வி.பி திகழ்ந்து வருவதாகவும்,ஜே.வி.பியினரின் நடவடி க்கைகள் கேலிக்குரியதாகியுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சர் பந்துல குணவர்தன போதிய தெளிவில்லாமல் வாழ்க்கை செலவு பற்றி கருத்தொன்றை வெளியிட்டுள்ளார் எனவும், அமைச்சர் பந்துல குணவர்தன முன்னணி பாடசாலைகளின் அதிபர்களுடனேயே நட்பு கொண்டுவருகிறார், அவ்வாறானவர்களுடன் நட்பு கொண்டுள்ளதால் அமைச்சருக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் துன்பநிலை புரியவில்லை என்றும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment