வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை செய்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை மேற்கொள்ள முயன்ற 500 இற்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
போலி தகவல்களை வழங்கி ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை மேற்கொள்ள முயன்றோரின் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும், 2011 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை ஆராய்ந்த போது, ஒரு இலட்சத்து 65 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை செய்திருந்நமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 474 இற்குமேற்பட்ட இரட்டை பதிவுகள் 3 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளதாகவும தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment