Monday, April 23, 2012

அமெரிக்க டிரோன் ரகசியங்களை கண்டுபிடித்து நாமும் அவற்றை தயாரித்துள்ளோம். ஈரான் தளபதி

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் டிரோன் போலவே ஈரானும் தயாரித்துள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான், ஈரானில் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதை தடுக்க, ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதலை அதிகரித்துள்ளது. ஈரானில் டிரோன் மூலம் தாக்குதல் நடந்த போது விபத்தில் சில டிரோன்கள் நொறுங்கி உள்ளன. அவற்றை ஈரான் ராணுவம் சேகரித்து ஆராய்ந்து வந்தது.

இந்நிலையில் ராணுவ கமாண்டர் அமீர் அலி ஹஜிஜடே நேற்று கூறியதாவது: அமெரிக்க டிரோன்களின் தொழில்நுட்ப ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் நாங்கள் கைப்பற்றிய அமெரிக்க டிரோனை ஆராய்ந்து பல ரகசியங்களை அறிந்து கொண்டோம். அதன்பின், டிரோன் போலவே நாங்களும் ஆளில்லா விமானத்தை தயாரித்துள்ளோம்.

டிரோனில் அமெரிக்கா பயன்படுத்தி உள்ள தொழில்நுட்ப ரகசியத்தில் 4 முக்கிய விஷயங்களை பகிரங்கமாக வெளியிடுகிறோம். அப்பொழுதாவது ஈரான் ராணுவத்தின் பலத்தை அமெரிக்கா புரிந்து கொள்ளட்டும். அமெரிக்காவின் ஆர்கியூ-170 டிரோன் போலவே ஈரானும் தயாரிக்க தொடங்கி உள்ளது. இந்த டிரோன் ஈரானின் தேசிய சொத்து. எனவே, இதுகுறித்து விரிவாக சொல்ல முடியாது. இவ்வாறு அமீர் அலி கூறினார்.

தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது யோசு துறைமுகம். இங்கு சர்வதேச ரோபோ கண்காட்சி மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை நடக்கிறது. இதில் 105 நாடுகள் பங்கேற்கின்றன. இதை முன்னிட்டு தண்ணீரில் நீந்த கூடிய மீன் ரோபோவை தென் கொரிய தாவூ நிறுவனம் உருவாக்கி உள்ளது. மீன் ரோபோ தண்ணீரை கிழித்து கொண்டு செல்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com