Sunday, April 29, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் - ஜம்மியத்துல் உலமா சபை இரண்டாக பிளவு

இலங்கையில் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து முஸ்லிம் உலமாக்களின் சபைகளின் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்தப் போராட்டத்தை அமைதியாக பிரார்த்தனைகளுடன் மாத்திரம் நடத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தது.

ஆனால், இந்த தினம் ''கறுப்பு வெள்ளியாக'' முஸ்லிம்களால் அனுட்டிக்கப்பட வேண்டும் என்று “இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை” கோரியிருந்தது.

இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கோரிக்கையை துரதிர்ஸ்டவசமானது என்று "அகில இலங்கை ஜாமியத்துல் உலமா சபை"யின் சார்பில் பேசிய அதன் துணைப் பொதுச் செயலர் எம். எஸ். எம். தாஸிம் மௌலவி கூறியுள்ளார்.

இதேவேளை, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இந்த விடயத்தில் மென்போக்கைக் கடைப்பிடிப்பதாக கூறியுள்ள இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, அதன் காரணமாகத்தான் தாங்கள் அதில் இருந்து பிரிந்து வந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com