மே தின பாதுகாப்புக்காக 10 ஆயிரம் பொலிஸார் கடமையில்
மே தின ஊர்வலங்களின் போது சுமார் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்படவுள்ள பொலிஸார், சீருடை மற்றும் சாதாரண உடைகளில்
கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெறவுள்ள மே தின ஊர்வலங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வீதிகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுவதுடன், அன்றைய தினம் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment