சிறுமியுடன் வவுனியா விடுதியில் தங்கியிருந்த 67 வயது நபருக்கு பிணை
16 வயதுடைய சிறுமியுடன் வவுனியா விடுதி ஒன்றில் தங்கியிருந்த காரணத்திற்காக வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 67 வயது நபரை கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.
கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான சந்தேக நபரை இம் மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி அலேக்ஸ்ராஜா உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் 27 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சட்டத்தரணிகளின் கருத்தினை செவிமடுத்த நீதிபதி அவரை 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன் அவருடைய கடவுச்சீட்டினையும் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment