இந்திய நாடாளுமன்ற குழு யாழ். விஜயம்
ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
விசேட உலங்கு வானுர்தி மூலம் யாழ். மத்திய கல்லூரியில் வந்திறங்கிய இத்தூதுக் குழுவினரை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் வரவேற்றனர்.
இந்திய பாராளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் ஒருநாள் தங்கியிருந்து அரசியல் கட்சிகளையும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளனர்.
0
0
0 comments :
Post a Comment