மியன்மாரின் நிதித் தடை மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது.
மியன்மாரில் இடம்பெற்று வரும் ஜன நாயக மறுசீரமைப்பிற்கு உதவியளிக்கும் வகையில் அன்நாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நிதி தடையினை தளர்த்துவதற்கு அமெரிக்கா அவதானம் செலுத்தி வருவாதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது.
மியன்மார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்துவதன் மூலம் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும், மனித நேய பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அமெரிக்க தெரிவித்துள்ளது.
இதே வேளை மியன்மார் ஜனாதிபதி உள்ளிட்ட 261 பேருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த நிதி மற்றும் பயணத்தடையை தளர்த்துவதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment