மன்னார் முருங்கன் விதை உற்பத்தி பண்ணையின் நடவடிக்கைகள் மீள் ஆரம்பம்
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கமைய பயங்கரவாத சூழல் காரணமாக சேதமடைந்திருந்த மன்னார் முருங்கன் விதை உற்பத்தி பண்ணையின் நடவடிக்கைகளை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீண்டும்ஆரம்பித்து வைத்தார்.
விவசாய அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மிக குறுகிய காலத்தில் முருங்கன் விதை உற்பத்தி பண்ணை புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்க வைக்கப்பட்டுள்ளது. இதற்கென 180 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டதுடன் சகல வகையான விதைகளையும் பயிரிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காலநிலைக்கு ஏற்ற விதத்தில் சகல விதமான விதைகளையும் உற்பத்தி செய்வதற்கும் பயிரிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்போது பயிரிப்பட்டுள்ள விதைகளின் மூலம் உயர்ந்தபட்ச விளைச்சலை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment