தனியார் வைத்தியசாலையின் சட்டவிரோத மருந்து விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு.
சுகாதார அமைச்சுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை யொன்றில் சட்ட விரோதமான முறையில் இயங்கி வந்த மருந்து விற்பனை நிலை மொன்றிலிருந்த மருந்து மற்றும் வாசனை பொருட்களை தேசிய மருந்தக அதிகார சபை பொறுப்பேற்றுள்ளது.
இதுதொடர்பாக தெரியவருவதாவது அண்மையில் வெளிநாட்டவர் ஒருவர் தனியார் வைத்தியசாலையொன்று மிகவும் கூடிய விலையில் தனக்கு மருந்து வகைகளை விற்பனை செய்ததாக தனது நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்திருந்தார். இந்த மின்னஞ்சல் செய்தி வாசனை பொருட்கள் மற்றும் தேசிய ஒளடத அதிகார சபைக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து வாசனை பொருட்கள் மற்றும் தேசிய ஒளடத அதிகார சபை பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம, இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார். இதற்கமைய இந்த மருந்து விற்பனை நிலையத்தை சுற்றி வளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த சுற்றி வளைப்பின் போது குறித்த தனியார் வைத்தியசாலை குறிப்பிட்ட மருந்து விற்பனை நிலையத்தை பதிவு செய்யாமல் நடாத்திச் சென்றமை தெரியவந்ததுள்ளது. இதற்கமைய அங்கிருந்த சகல மருந்து பொருட்களையும் அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதுடன் இந்த மருந்து விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை நாட்டில் மேலும் ஒரு சில தனியார் வைத்தியசாலைகளில் இவ்வாறு சட்டவிரோதமாக கூடிய விலைக் மருந்து பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்,அவற்றை சுற்றி வளைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் வாசனை பொருட்கள் மற்றும் ஒள்டத அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment