சாட்டி கடற்கரையிலுள்ள கடற்தாவரங்களை அகற்றுமாறு உல்லாசப்பயணிகள் கோரிக்கை
யாழ்.வேலணைச் சாட்டிக்கடற்கரையில் கரையில் ஒதுங்கியுள்ள கடற்தாவரங்களை அகற்றுமாறு உல்லாசப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உல்லாசப்பயணிகளை இலக்கு வைத்து வேலணை பிரதேச சபையுடன் இணைந்து பொருளாதார அமைச்சினால் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அண்மைக்காலமாக சாட்டிக்கடற்கரையின் கரையில் ஒருவிதமான கடற்தாவரங்கள் ஒதுக்கியுள்ளன. இதன் காரணமாக கடற்கரைக்கு வருகை தரும் உல்லாசப்பயணிகள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே மிக விரைவாக இவ்வாறு கரையில் ஒதுங்கியுள்ள கடற்தாவரங்களை அகற்றித்தருமாறு உல்லாசப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை அண்மைக்காலமாக சாட்டிக்கு பெருமளவான உல்லாசப்பயணிகள் நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment