140 இலட்சம் ரூபா செலவில் தாய் , சேய் சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டது
நீர்கொழும்பு - குடாப்பாடு பிரதேசத்தில் 140 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட தாய் மற்றும் சேய் சிகிச்சைப் பிரிவு இன்று (24-4-2012) திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாரியார் சட்டத்தரணி புஷ்பா ராஜபக்ஷ தாய் மற்றும் சேய் சிகிச்சைப் பிரிவினை நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர,முன்னாள் மேயர் ஹேர்மன் குரேரா , மாநகர சபை உறுப்பனர்கள் , மேல் மாகாண, மாவட்ட மற்றும் மாநகர சுகாதார அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment