Tuesday, April 24, 2012

பிரான்ஸ் அதிபர் தேர்தல் சர்கோசிக்கு பின்னடைவு


பிரான்ஸ் நாட்டில், நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில், அதிபர் சர்கோசி பின்தங்கியுள்ளார். அடுத்த மாதம் 6ம் தேதி, இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, நேற்று முன்தினம், அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலாண்ட் போட்டியிட்டார். அதிபர் தேர்தலில், மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும் என, அதிபர் சர்கோசி உறுதியளித்திருந்தார்.

நேற்று முன்தினம், ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில், சர்கோசிக்கு 27 சதவீத ஓட்டுகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட பிராங்காய்ஸ் ஹோலண்டுக்கு, 28.56 சதவீத ஓட்டுகளும், லீ பென் என்பவருக்கு, 18.12 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.இந்த தேர்தலில், 50 சதவீத ஓட்டுக்கள் யாருக்கும் கிடைக்காததால், மறு தேர்தல், அடுத்த மாதம் 6ம் தேதி, நடைபெற உள்ளது. இரண்டாவது கட்ட தேர்தலில், சர்கோசியும், பிராங்காய்ஸ் ஹோலண்ட் இரண்டு பேருக்கும் இடையே தான் போட்டி. மற்றவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, 18 சதவீத ஓட்டுகள் பெற்ற லீ பென்னின் ஆதரவை, சர்கோசி பெற விழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com