ஜ.நாவில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக தென்னாபிரிக்கா தெரிவிப்பு
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு, அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக, தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.
ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றிய தென்னாபிரிக்க அரசின் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கான பிரதியமைச்சர் மேரியஸ் பிரான்ஸ்மன், இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கு ஆணைக்குழுவை நியமித்தமைக்காக, தென்னாபிரிக்க அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தை பாராட்டியது.
மேலும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கம், கிரமமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, தமது நாடு மகிழ்ச்சியடைவதாக, தென்னாபிரிக்க பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment