ஈரானின் விண்வெளி மத்திய நிலையம் முதற்தடவையாக பார்வையிட அனுமதிக்கப்பட்டது
ஈரானின் முக்கிய விண்வெளி மத்திய நிலையம் முதல் தடவையாக ஊடகவியலாளர்களுக்கு, பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஈரானின் விண்வெளி மத்திய நிலையத்தை பார்வையிட, ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுகோஸ் விண்வெளி மையத்திலிருந்து அண்மையில் நவாட் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.
காலநிலை தகவல் சேகரிப்பு மற்றும் இயற்கை அனர்த்த அவதானிப்புக்காக இந்த விண்வெளி ஓடம், விண்ணில் செலுத்தப்பட்டது.
அலுகோஸ் விண்வெளி மையத்திற்கு வருகை தந்த ஊடகவியலாளர்களுக்கு, இந்த விண்வெளி மத்திய நிலையம் தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் பற்றி அதிகாரிகளினால் விளக்கங்கள், வழங்கப்பட்டன.
அத்துடன் ஈரான் விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்களின் திறமைகள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் அறிந்து கொண்டனர். இந்த விண்வெளி மத்திய நிலையத்தில், எவ்வித ராணுவம் தொடர்பான செயற்பாடுகளும் இடம்பெறவில்லையென, இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
0 comments :
Post a Comment