கொழும்பு மகசீன் சிறையில் அதிநவீன கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டன.
கொழும்பு பதிய மகசின் சிறைச்சாலையில் திடீரென நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரிசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு பேசக் கூடிய அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியஇ 13 நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளும்இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரிசிறி கஜதீர மேலும் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் அனுராதபுர சிறைச்சாலையிலும் இவ்வாறு அதி நவீன கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment