முஸ்லிம் வியாபாரிகளே யாழ்பாணத்திற்கு கஞ்சா கொண்டுவருகின்றனர். –சமன் சிகேரா
யாழ்.குடாநாட்டிற்குள் தென்பகுதி முஸ்லீம் வியாபாரிகள் மூலம் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருப்பதாக யாழ்.பொலிஸ் நிலைய தலமை அதிகாரி சமன் சிகேர தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கள் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விதம குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஜந்து சந்திப் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாகவும் அங்கு முஸ்லீம் பகுதியில் இந்த கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சட்டவிரோ நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் குறித்து பொலிஸார் விழிப்பாய் இருப்பதாகவும் போதைப் பொருள் விற்பனை முகவர்கள் அதிகளவில் யாழ்.ஜந்து சந்திப்பிகுதியில் நடமாடுவதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment