விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டு முதல் பட்டப்படிப்பு – எஸ்.பி
எமது நாட்டிலுள்ள திறமை மிகுந்த வீர வீராங்கனைகள் சிலரை தெரிவு செய்து , அவர்களுக்கு பட்டம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வருடத்தில் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் மூலமாக அடிப்படை பாடநெறிகள் கற்பிக்கப்பட்டு , அடுத்த வருடம் முதல் சப்ரகமுவ பல்கலைக்களகத்திற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும், ஒரு வருடத்தில் 5 வீரர்களுக்கு சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை கற்பதற்கு வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment