புற்றுநோய் வைத்தியசாலைக்கு 100 மில்லின் ரூபா செலவில் புதிய அலகு
தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக்கு 100 மில்லியன் ரூபா செலவில் புதிய அலகென்று நிர்மானிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச காணியை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி நேரில் சென்று பார்வையிட்டு இது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இவ்வலகானது colours of courage trust இனால் சேகரிக்கப்பட்ட 100 மில்லியன் நிதியின் மூலம் mass holding நிறுவனத்தினால் நிர்மானிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனப்பிரதிநிதிகளும் துறைசார் அதிகாரிகளும் மேற்படி அலகு நிர்மானிக்கப்படவுள்ள இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுகளை நடாத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment