சீன அரசாங்கம் தனது பாதுகாப்பு செலவினை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
உலகின் 2 வது மிகப்பெரிய இராணுவத்தை கொண்டுள்ள சீனா தமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு செலவினை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதன்பொருட்டு பாதுகாப்பு செலவீனங்களுக்காக 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருடம் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது நூற்றுக்கு 11.2 வீத அதிகரிப்பாகும்..
இதே வேளை சீனாவின் பொருளாதாரத்தில் நூற்றுக்கு 7.5 வீத வளர்ச்சி ஏற்படுமென எதிர்ப்பார்த்துள்ளது. உலகில் பலம் வாய்ந்த இராணுவத்தை கொண்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செலவும் 739.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதே வேளை பிரிட்டன் வருடாந்தம் 63.7 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் ரஷ்யா 52.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் இந்தியா 31.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் வருடாநம் செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment