ஏமன் நாட்டில் ராணுவ முகாம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: 85 பேர் பலி
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக அல்கொய்தா இயக்க ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஷின்ஜிபார் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது வெடிகுண்டுகளை ஏற்றிய லாரிகளை மோத செய்து தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்தது. இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 85 பேர் பலியானார்கள். ஆனால் ராணுவ அதிகாரிகள் கூறுகையில் தங்களது தரப்பில் 35 பேர் இறந்ததாகவும், பலரை காணவில்லை என்றும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment