ஆட்கடத்தல்களை தடுக்க விசேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
நாட்டில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் ஆட்கடத்தல் உட்பட ஏனைய மோசடிகளை தடுக்க நீதியமைச்சினால் விசேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மைக்கல் ஜே. ஸ்வாக் அமைச்சர் ரவூப் ஹக்கீமை நீதியமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதன்போது ஆட்கடத்தல் உள்ளிட்ட மோசடிகளை தவிர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவிகள் அவசியமென அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இவ்வேலைத்திட்டங்களுக்குஇ அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புகளும் பெறப்பட்டுள்ளன என்றும் நலன்புரி கிராமங்களில் வாழும் மக்களுக்குஇ தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment