வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பெண்களை விட ஆண்கள் அதிகமாம்
வரலாற்றில் முதல் தடவையாக பெண்களை விட, ஆண்கள் அதிகளவு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக, அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2011 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, அவ்வருடம் 44.78 வீதமான பெண்கள், வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ள அதேவேளை, 52.22 வீதமான ஆண்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே, அவர் இதனை கூறினார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுச்செல்வோரில் பெரும்பாலானோர் பணிப்பெண்களாக செல்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், பயிற்சிபெற்ற பெண்களை அதிகளவு வெளிநாடுகளுக்கு அனுப்புவதே, அரசாங்கத்தின் நோக்கமென்று தெரிவித்தார்.
வெளிநாட்டில் பணிபுரிவதன் மூலம், அதிகளவு அந்நிய செலாவணி, இலங்கைக்கு கிடைப்பதாக தெரிவித்த அமைச்சர், 2009 ஆம் ஆண்டு 47.3 வீதம், அந்நிய செலாவணி கிடைத்ததாகவும், தெரிவித்தார்.
0 comments :
Post a Comment