யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய மேதின நிகழ்வில் கலந்துக் கொள்ளப்போவதில்லை - சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள தேசிய மேதின நிகழ்வில், தான் கலந்துக் கொள்ளப்போவதில்லை என்று கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற விசேட கூட்டம் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, ஐக்கிய தேசிய கட்சி மேதின நிகழ்வை நடத்துவதற்கு அவர் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு, இதற்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் மேதினத்தை நடத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தாம் யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகளுடன் ஐக்கிய தேசிய கட்சி நடத்தும் மேதின நிகழ்வில் கலந்துக் கொள்வதில்லை எனவும், கொழும்பில் நடைபெறவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துவிட்டு அவர் கூட்டத்தில் இருந்து வெளியுறினார்.
இதேவேளை, , தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள மே தின கூட்டம் தொடர்பில், மாற்று தீர்மானத்துக்கு இடமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment