இந்திய அரசாங்கத்திற்கும் - இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளில் பின்னடைவு
விமான பாதுகாப்பு மற்றும் வெடிபொருட்களின் பாரிய பற்றாக்குறை இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை பலவீனமடைய செய்துள்ளதாக இராணுவத் தளபதி வீ.கே.சிங் தெரிவித்த கூற்று காரணமாக இந்திய அரசாங்கத்திற்கும்,அந்நாட்டு இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளில் புதிய பின்னடைவுகள் தோன்றியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் இரண்டாவது மிகப் பெரிய இராணுவமான இந்திய இராணுவம் வெடிப்பொருட்கள் இல்லாமல் உள்ளதாகவும், உயர்மட்ட விசேட படைகள், அத்தியாவசிய ஆயுதங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாவும், விமான படை 97 வீதம் செயழிந்துள்ளதாகம் பழமையான ஆயுதங்கள் கையிருப்பு இந்தியாவை பலவீனமடையச் செய்துள்ளதாக அந்த நாட்டு இராணுவத் தளபதி,பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment