Wednesday, March 28, 2012

'எக்ஸ்போ 2012' சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

இலங்கை உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 சர்வதேச கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு- பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அடங்கலான 5 அமைச்சுக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. 300க்கும் அதிகமான இலங்கை உற் பத்தியாளர்களின் சுமார் 400 கடைத் தொகுதிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதோடு 75 வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உரையாற்றுகையில்,

தீவிரவாதிகளின் செயற்திட்ட வரைபுகளுக்கு உதவி செய்யும் நபர்களின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதென தெரிவித்துள்ளார். 2012 எக்ஸ்போ சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்கள் மூலம் அது புலப்படுவதாக ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக முயற்சியாளர்களினதும் சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் வகையில் முதற் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com