Wednesday, February 29, 2012

நாட்டை முற்றிலும் சீர்குலைக்க மாணவர்களை பயன்படுத்தும் JVP யின் நோக்கம் என்ன ?

நாட்டை சீர்குலைக்கும் சூழ்ச்சிகளில், பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் ஜேவிபி யினரின் செயற்பாடுகளின் பின்னணியில் இருக்கக்கூடிய திட்டங்கள் பல அம்பலமாகியுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஜே.வி.பி. மற்றும் அதன் புரட்சிக்குழு வே இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச சக்திகளின் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு துணைநின்று, நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்தி, சர்வதேசத்திற்கு ஆதரவு வழங்குவதே, பலக்லைக்கழகங்களில் மோதல்களை ஏற்படுத்துவதன் நோக்கமென, தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகங்களில் பிரவேசிக்கும் புதிய மாணவர்களை, அரசியல் ரீதியாக பிளவுபடுத்தும் சூழ்ச்சியில், ஜே.வி.பி. ஈடுபட்டுள்ளது. கல்வியை முடிக்காமல், ஜே.வி.பி. யின் அரசியலில் ஈடுபட்ட பழைய மாணவர்கள், இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் முன்நின்று செயற்படுகின்றனர்.

புரட்சிகர கருத்துகளுடன் பல்கலைக்கழகங்களில் பிரவேசிக்கும் மாணவர்கள், ஜே.வி.பி. யினரின் கடந்த காலத்தை அறிந்து வைத்திருக்காமை, இந்நிலைமைக்கான காரணமென, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1971, 1987, 1989 ஆகிய காலப்பகுதிகளில், ஜே.வி.பி., நாட்டை அராஜகத்திற்குட்படுத்தியதையும், பல்கலைக்கழக தொகுதியை முற்றாக சீர்குலைத்து, பல்லாயிரக்கணக்கான மாணவர்களை பலிகொண்ட கடந்த காலத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டுமென, அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1970 ஆம் ஆண்டு மக்கள் ஆணையினால், தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்த்து, போலியான புரட்சிகரமான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு, ரோஹண விஜேவீர, 1971 ஆம் ஆண்டு முயற்சி எடுத்தார். ரோஹண விஜேவீரவின் இந்த போலி அரசியல் நிகழ்ச்சி நிரலில், பல்கலைக்கழக மாணவர்கள் சிக்கினார்கள். தாம், அதிகாரம் பெறுவதற்கு, அப்பாவி மாணவர்களை பலிகொடுத்த விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. தலைவர்கள், கிளர்ச்சிக்கு முன்னர் சிறைவாசம் அனுபவித்து, தமது உயிரை பாதுகாத்து, மீண்டும் இந்நாட்டில் அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர்.

71 ஆம் ஆண்டு புரிந்த அழிவை, ரோஹண விஜேவீர மீண்டும் 88 ஆம் ஆண்டிலும் ஆரம்பித்தார். இதனூடாக, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு, விஜேவீரவும், ஜே.வி.பி.யும், டயர் குவியல்களையும், வதை முகாம்களையுமே மீதப்படுத்தினர்.

மிலேச்சத்தனமான பயங்கரவாதி வேலுப்பிள்ளை பிரபாகரன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை படுகொலை செய்ததற்கு இணைவாக, ரோஹண விஜேவீர தலைமையிலான கொலையாளிகள், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் கொலைக்கு காரணமாக அமைந்தனர்.

அன்று பல பல்;கலைக்கழகங்கள் வதை முகாம்ஙகளாக காணப்பட்டன. விஜேவீரவின் மிலேச்சத்தனத்திற்கு, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், மிலேச்சத்தனத்தினால் பதிலளித்தது. காலையில் பல்கலைக்கழகங்களுக்கு சென்ற பிள்ளைகளை, மாலையில் பெற்றோர் முண்டமாகவே, காண வேண்டி ஏற்பட்டது. கைகள், பின்புறம் கட்டப்பட்ட நிலையில், எரிக்கப்பட்ட சடலங்கள், சந்திகள் தோறும் காண முடிந்தது.

விஜேவீரவின் விடுதலைக்காக, ஏராளமான மாணவர்கள், உயிர்த்தியாகம் செய்தனர். தமக்கு கற்பித்த ஆசிரியர்களை கூட, கொலை செய்வதற்கு, பல்கலைக்கழக மாணவர்கள், கரங்களில் துப்பாக்கிகளை ஏந்தும் அளவுக்கு, அவர்கள் மோசமானவர்களாக மாறினர்.

அன்று பல்கலைக்கழக மோதல்கள் மற்றும் படுகொலைகளை புரிந்த ஜே.வி.பி. தலைவர்கள், எந்தவித பாதிப்புமின்றி, மிக பாதுகாப்பாக மறைந்திருந்தார்கள்;. 89 ஆம் ஆண்டுக்கு பின்னர், பிறந்த பிள்ளைகள், இன்று இளைஞர்களாக இருக்கின்றனர். அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக காணப்படுகின்றார்கள். தமது சகோதரர்களுக்கு விஜேவீர புரிந்த அநீதிகளை, இவர்கள் அறியாமல் இருக்கலாம். அறிந்து கொள்வதற்கும், சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. பெறுமதிமிக்க தமது சகோதரர்களை கொலை செய்வதற்கு, வழிவகுத்த ஜே.வி.பி., தம்மையும் பின்தொடர்வதை, பல்கலைக்கழக மாணவர்கள், அறிந்து வைக்க வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களை பகிர்ந்து கொள்வதற்கு, ஜே.வி.பி.யின். சோமவன்ச அணியும், குமார் குணரட்னம் அணியும், கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. வாழ்க்கையின் ஒரு சிறந்த பயணத்தை நோக்கி செல்ல முயற்சிக்கும் கிராமங்களின் அப்பாவி பிள்ளைகளை, பல்கலைக்கழகத்தில் வைத்து, தமது மிலேச்சத்தனமான அரசியலுக்கு பயன்படுத்த, ஜே.வி.பி. சமூக விரோதிகள் முயற்சிப்பதை, நாடும் கண்டிக்க வேண்டுமென, பல்கலைக்கழகத்தின் மீது பற்றுவைத்துள்ளோர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தியுள்ள சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழக தொகுதி உட்பட இந்நாட்டின் இளைஞர் யுவதிகளின் நோக்கமாக அமைய வேண்டியது, நாட்டுக்கு எதிரானவர்களுக்கு எதிராக, தேசப்பற்றுடன் கைகோர்ப்பதாகும். ஏனையவர்களின் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலன்றி, தமது எதிர்கால கல்வி நிகழ்ச்சி நிரலூடாக, நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்கு, முன்நின்று செயற்படுவது, அனைத்து இளைஞர்களின் பொறுப்பாகும். குறிப்பாக மக்களின் பணத்தை கொண்டு, உயர் கல்வியை பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்பாக அமைய வேண்டும்.

தொழிற்சங்க நடவடிக்கைகளினால், அரசாங்க வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை சீர்குலைக்க, ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய தொழிற்சங்கமொன்று மேற்கொண்ட முயற்சி, முற்றாக தோல்வியடைந்துள்ளது.

ஜே.வி.யுடன் தொடர்புடைய தொழிற்சங்கமொன்று இன்று சுகயீன விடுமுறையில் அரச வைத்தியசாலைகளி;ன் சேவைகளை சீர்குலைக்க முயற்சித்தது. எனினும், இது தோல்வியடைந்து, வைத்தியசாலைகளில், நோயாளர்களுக்கு வழங்கும் சிகிச்சைகளை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென, அரச வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை கண்டித்துள்ள ஏனைய தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி.; யுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் அன்றி, அது ஒரு அரசியல் செயற்பாடாகுமென, தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com