புலிகள் செய்த ஒவ்வொரு விடயத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்பு கூற வேண்டும் - பசில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு 2001 மற்று,2004 ஆம் ஆண்டுகளில் இடம் பெற்ற தேர்தல்களின் போது ,தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாங்கள் புலிகள் இயக்கத்தை பிரதிநிதிப்படுத்துவதாக கூறியிருந்தார்கள் .
இதன் காரணமாக விடுதலை புலிகள் மேற்கொண்ட சகல குற்றச்செயல்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
கூட்டமைப்பினர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட
அங்கு சென்றால், அவர்களுக்கு அதற்கான பதிலை கூற வேண்டிவரும் என்று பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார் .
சர்வதேச வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஒரு மிகச் சிறிய நாடாகும் . மனித உரிமை ஆணைக்குழுவினால் எமது நாட்டுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது . நாட்டுக்கு வெளிநாடுகளின் அழுத்தங்கள் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது சகலரது பொறுப்பாகும் என்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment