ஜெனிவாவில் நம் நாட்டு குழுவினருடன் ஓர் அனுபவம் - துறையூர் :காசி-
மனித உரிமைப் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைககு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரோரணைக்கு முகம் கொடுக்கவும் எடுக்ககப்படவிருக்கும் தீர்மானம் இலங்கைக்கு சாதகமானதொன்றாக்கும் முன்னேற்பாடான முயற்சிகளில் ஈடுபடும் நோக்குடன் ஜெனிவாவில் தளம் அமைத்திருக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை வென்றெடுக்க தீவிரமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதையொட்டி ஐரோப்பாவின் பல திசைகளிலிருந்தும் இன மொழி வேறுகாடுகளுக்கப்பால் தேச விசுவாசத்தினை முதன்மைப் படுத்துகின்ற தமிழ், சிங்கள, முஸ்லீம் உள்ளடங்கிய ஏராளமான புலம் பெயர் இலங்கையர் ஜெனிவா சென்று அஙகு நிலை கொண்டிருக்கும் இலங்கைப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்து பேசி அவர்களது முன்னெடுப்புகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சந்திப்புக்கள் இலங்கைக் குழுவினருக்கு ஒரு புதிய உத் வேகத்தினை கொடுத்து வருகின்றது. இந்த வகையில் கடந்த 22.23.ம் திகதிகளில் சலசலப்பு இணையத்தள ஆசிரியர் உட்பட பிரான்சில் இருந்து சென்றவர்களும் சுவிஸ் நாட்டில் காணப்படக்கூடிய தேச விசுவாசத்தினை முதன்மைப் படுத்தும் இலங்கையர்களும், ஜெனிவாவில் ஒன்றிணைந்த குழுவாகி குறித்த இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து கலந்து பேசி குறித்த பிரோரணை தொடர்பாக தமது ஆதரவு நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினர். கௌரவ அமைச்சரகளான டக்ளஸ் தேவானந்தா, பதயுதீன் முகமத் Rauff Hakeem சுவிஸ நாட்டு இலங்கைத்தூதுவர் ஆகியோரை சந்தித்து மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை தொடரபான பிரோரணை தொடர்பாக நிலவக் கூடிய சர்வதேச ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடு பற்றியும் மற்றும் இன நல்லிணக்கம், அரசியல் தீர்வு தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தமிழ் , சிங்கள, முஸ்லீம் தரப்புக்கள் ஒன்றிணைந்து தேசத்துக் கெதிரான பிரோரணையினை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய விடயமாக காணப்பட்டது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக தேசத்தின் இறைமை அதன் சுயாதீனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் இறுக்கமான ஐக்கியம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் நிலை கொண்டிருந்ததை பெருமையுடன் குறிப்பிடலாம். இவையெல்லாம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க கட்டுமானங்களுக்கான முன்னேற்பாடுகளாகவே எம்மால் அடையாளம் காணப்படுகின்றன.
இவ்வாறான ஒரு சூழ் நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் அமைச்சர் என்ற வகையில் அரசின் பிரதிநிதியாகவும் இலங்கை குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் nஐனிவா வந்தடைந்துள்ளார். இவரது வருகையானது அந்நிய சக்திகளுக்கு தேசத்ததை தாரை வார்த்து கொடுக்க முயலும் தேச விரோத சக்திகளுக்கு கடுமையான எரிச்சலை கிளப்பிவிட்டுள்ளது என்ற விடயத்தினை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது. இதன் பிரதி பலிப்பாக புலம்பெயர் தேசத்தின் சில புலி சாரபு ஊடகங்கள் அவர் தொடரபில் தாறுமாறான உண்மைக்குப் புறம்பான அவதூறு பிரச்சாரஙகளை தொடங்கியிருக்கின்றன.
எனவே இவ்வாறன புலிகளின் சேறடிப்பு பிரச்சாரங்களை ஒதுக்கி தள்ளி நாட்டின் எதிர்கால நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்ற தேசத்தின் கடமையை அனைவரும் நிறைவேற்ற முன்வரவேண்டும் என்பதே அங்கு வந்திருந்த பிரமுகர்கள் அனைவரதும் ஒரு மித்த குரலா இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
0 comments :
Post a Comment