Friday, January 13, 2012

உலக தரத்திற்கு தாதிமாருக்கு பயிற்சி வழங்கி வெளிநாட்டு வேலைவாய்பை பெற முயற்சி.

உலக  தொழில்வாய்ப்புச் சந்தையில் தாதிமார்களுக்காக காணப்படும் கேள்விகளுக்கு இந்நாட்டில் தனியார் வைத்தியசாலைகளுடன் ஒன்றிணைந்து பயிற்சிகள் வழங்கும் வேலைப் பணிகள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் அமல் சேனாலங்காதீர தெரிவித்தார்.

நாவல பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறும் தாதிமார் பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்கு உயர் தொழில் வாய்ப்பு காத்திருக்கிறதாக தவிசாளர்  தெரிவித்தார்.

இதற்குச் சமனான சர்வதேச மட்டத்திலான தாதி பாடநெறியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல். விவசாயத்துறை, மீன்பிடித்துறை  போன்ற கேந்திர நிலையங்களில் தொழிலுக்காக இளைஞர் யுவதிகளுக்க பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com