மாளிகாவத்தை குடு முதலாளியான பெண் குருநாகலில் கைது.
கொழும்பு மாளிகாவத்த பிரதேசத்தில் பெரியளவில் ஹெரொயின் வியாபாரம் செய்பவர் எனக் கூறுகின்ற 58 வயதுடைய பெண் ஒருவர் குருநாகலில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவருடைய முன்னாள் கணவர் குருநாகலை வதிவிடமாக கொண்டு முச்சக்கர வண்டி ஒட்டுகின்ற சாரதியாவர். அவர் குருநாகல் கெட்டுவான பிரதேசத்தில் நடத்தி வந்த தங்குமிட விடுதியை தீயிட்டு கொளுத்தி நாசம் பண்ணிய சம்பவத்துடன் முன்னாள் மனைவி தொடர்பு பட்டிருக்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தன்னுடை தங்மிட விடுதியை தீயிட்டு நாசம் பண்ணினார் என்ற பெயரில் அப்பெண்ணை தாறுமாறாக தாக்கிய கணவர் அவரை பொலிஸில் ஒப்படைத்துள்ளார். காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பெண்ணின் குடும்பத்தவர்களில் பெருந்தொகையானவர்கள் ஹெரொயின் வியாபாரத்துன் தொடர்புடையவர்கள் எனவும் அயுட்கால சிறைத் தண்டனை வழங்கப்படக் கூடியவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்தப் பெண் கடந்த வாரம் மாளிகாவத்தை பிரதேசத்தில் பாதாளக் கோஷ்டிகளுடைய செயற்பாட்டில் தொடர்புடையவர் எனவும் விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment