பொங்கல் விழாவைக் கொண்டாட மும்முரமாக நிர்கிறார் யாழ் மேயர் அம்மா!
ஜனவரி 13-15 வரை நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பொங்கல்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் யாழ்.மாநகரசபை வளாகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வர்த்தகச் சந்தை , பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவற்கு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியக்கிடைக்கின்றது.
ஜனவரி 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு குருநகர் கடற்கடையில் நீச்சல் போட்டியும், முனியப்பர் கோவிலடியில் மரதன் ஓட்டப் போட்டியும் நடைபெறவுள்ளதுடன், காலை 8.00 மணிக்கு முனியப்பர் கோவில் சுற்றாடலில் பொங்கல் போட்டியும் நடைபெறவுள்ளது.
மாலை நிகழ்வாக 6.00-10.00 மணிவரை வரவேற்பு நடனம், சொல்லாடு களம், யாழ்.பாடி நாட்டுக் கூத்து, பல்லியம் இசை நிகழ்வு என்பன நடைபெறவுள்ளன.
14ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.00மணிக்கு சைக்கிள் ஓட்டப் போட்டி, மாற்றுத் திறனாளிகளக்கான முச்சக்கரவண்டிப் போட்டி என்பன முனியப்பர் கோவில் முன்பாக நடைபெறவுள்ளதுடன், நண்பகல் 12.00 மணிக்கு மாட்டு வண்டிச் சவாரியும், மாலை 6.00 மணிக்கு தென்னிந்திய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கிளித்தட்டு, கபடி, தயிர்முட்டி உடைத்தல், கிறிஸ் மரம் ஏறுதல், சண்டோ விளையாட்டு என்பனவும் மாலை 6.00 மணிக்கு தமிழன், தமிழிச்சி இறுதித் தேர்வு, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் 1ஆம் இடம் பெற்றவர்களின் நிகழ்வு, கவியரங்கம், மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வு மற்றும் உள்ளூர்க் கலைஞர்களின் இசை நிகழ்வு என்பனவும் நடைபெறவுள்ளன.
0 comments :
Post a Comment