Thursday, January 12, 2012

வவுனியாவில் ஆயுதக் கோஷ்டியினால் கடத்திச் செல்லப்பட்ட வான் மிருசுவிலில் மீட்கப்பட்டது.

ஆயுத கொள்ளைக்கோஷ்டியினரால் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்துடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதா வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த வாகனம் கடந்த 24 ம் திகதி இரவு வேப்பங்குளப் பிரதேசத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதாகும். இவ்வாறு கடத்திச் சென்றவர்கள் பல மணித்தியாலங்களுக்கு பின்னர் சாரதியை விடுதலை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது யாழ்பாணம் மிரிசுவில் பிரதேசத்தில் குறித்த வேன் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட வேன் ரூபா 40 இலட்சம் பெறுமதி வாய்ந்ததாகும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் சில நாட்டுகளுக்கு முன் சந்தேக நபர்கள் இன்னுமொரு வேனை கடத்திச் சென்ற போது வேனின் டயர் மசகு ஒன்றினுள் விழுந்ததால் அதனை விட்டுச் சென்றதாகவும் சந்தேக நபர்கள் விசாரணையின் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரு சந்தேக நபர்கள் சில வருடங்களுக்கு முன் கப்பம் பெறுவதற்கு வியாபாரி ஒருவரை கடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் சிறைச்சாலையிலிருந்து பிணையில் வந்தவர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com