Thursday, January 12, 2012

திடீர் விபத்துக்களின்போது முதலுதவி அளிப்பது எவ்வாறு? விசேட பயிற்சித் திட்டங்கள்.

திடீர் விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு உரிய முதலுதவி வழங்கப்படாமையினால் அவர்கள் நிரந்தரமாக ஊனமடைவதுடன் மரணத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதனைமுன்னிட்டு மக்களுக்கு உரிய முதலுதவி அறிவினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய இரத்த தான சேவையின் ஊடாக பாடசாலை அரசாங்க நிறுவனங்கள், தொண்டர் அமைப்புக்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே மேற்படி திட்டம் இலவசமாக நாடெங்கும் முன்னெடுக்கப்படுகின்றது.

தேசிய சுவடிகள் திணைக்களத்தில் இது தொடர்பான செயற்த்திட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் எந்தவொரு அமைப்போ நிறுவனமோ பங்குபற்றலாம். 0112369931 முதல் 34 வரையான தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

இதேநேரதம் ஒழுக்க விழுமியமிக்க சாரதிகளை உருவாக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை புதிய திட்டங்களை வகுத்துள்ளது. வீதி விபத்துக்களை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். இதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பாடசாலையின் மூலம் குறைந்த செலவில் ஒழுக்க விழுமியமிக்க சாரதிகளை உருவாக்குவதற்கான பயிற்சிகளை வழங்குகிறது.

சிறிய ரக வாகன சாரதி பயிற்சிக்காக 6 ஆயிரத்து 500 ரூபாவும்,  பார ஊர்திகளுக்காக 9 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகின்றது. 17 வயதை பூர்த்தி செய்த அனைவரும் இப்பயிற்சியை பெற்றுக் கொள்ளலாம். களுத்துறை உடஹகமுல்ல, பதுளை , பொத்துஹெர,  மொரட்டுவ மற்றும் கல்முனை சாரதி பயிற்சி பாடசாலையில் பயிற்சி நெறிகள் இடம்பெறுகின்றன. விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளது.  இதனையொட்டி நவீன வசதிகள் கொண்ட சாரதி பயிற்சி பாடசாலைகள்  நிர்மாணிக்கப்படவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com