உயிரிழந்த இயக்க உறுப்பினர்கள் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்கக் கடற்படை வீரர்கள். (VIDEO)
ஆப்கானில் உயிரிழந்த தலிபான் இயக்க உறுப்பினர்கள் மீது அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் சிறுநீர் கழிக்கும் காணொளியானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இக் காணொளி வெளியானதையடுத்து குறித்த வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமென அமெரிக்கக் கடற்படைகளின் தலைமையகம் அறிவித்துள்ளது.
தற்போது யூடீயூப்பில் வெளியாகியுள்ள இக்காணொளியில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த தலிபான்களின் மீது சிரித்துக்கொண்டு சிறுநீர் கழிப்பது போல் உள்ளது.
இவ்வீரர்கள் யார் என இதுவரை இனங்காணப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கடற்படை ஸ்னைப்பர் படைப்பிரிவின் வீரர்களாக இருக்கலாம் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment