வர்தகர் கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் உட்பட நால்வருக்கு பிணை
நீர்கொழும்பு-கட்டுவ பிரதேசத்தில் வர்தகர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட நான்கு பேரை , நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தலா 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா மூன்று இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் மார்க் சுஜித் பெர்னாந்து ,நீர்கொழும்பு கட்டீயல தெமங் சந்தியை சேர்ந்த ரம்யகுமார் சில்வா , கட்டுவ பிரதேசத்தை அன்ரன் தயான் நிசாந்த பெர்னாந்து , ஏத்துக்கால பிரதேசத்தை சேர்ந்த ஜோசப் டிலக்சன் பெர்னாந்து ஆகியோரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.
.நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தை சேர்ந்த யூட்டுவன் தில்சிரி பொன்சேகா (41வயது) என்ற இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் ./span>
0 comments :
Post a Comment